62 வயசாகியும் பிரபு மாறவில்லை! 23 வருசத்துக்கு பிறகு ‌மதுபாலா வெட்கம்!

80களில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் பிரபு. சிவாஜி கணேசனின் மகனான இவர் அந்த காலங்களில் கிட்டத்தட்ட மிகப்பெரும் நடிகராக வலம் வந்தவர்.


இவருக்கு தற்போது 62 வயதாகிறது.

கோழி கூவுது, ராகங்கள் மாறுவதில்லை, சூரக்கோட்டை சிங்கக்குட்டி, கைராசிக்காரன், என்னுயிர் கண்ணம்மா, அக்னி நட்சத்திரம், குரு சிஷ்யன் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர்.

இவர் கடந்த 1996ம் ஆண்டு இயக்குனரும் அரசியல்வாதியுமான சீமான் இயக்கத்தில் பாஞ்சாலங்குறிச்சி என்ற ஒரு படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மதுபாலா என்பவர் நடித்திருப்பார் .

தற்போது 23 வருடங்களுக்குப் பிறகு பிரபு மற்றும் மதுபாலா ஆகியோர் மீண்டும் வெள்ளித்திரையில் இணைய உள்ளனர். இந்தப் படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது.

இதனை இயக்குனர் சந்தோஷ் ஹரி இயக்குகிறார் இந்த படத்தில் ராகுல் விஜய், பிரியா என பலர் நடிக்கின்றனர். மேலும் நாசர் மனோபாலா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைய உள்ளது. இதனால் 23  வருடங்களுக்குப் பின்னர் தனக்கு பிடித்த நாயகியுடன் மீண்டும் சேறுவதால் உள்ளதால் செம குஷியாக உள்ளார் நடிகர் பிரபு.