பரபரப்பான சூழலில் பொதுக் குழுவைக் கூட்டுகிறது அ.தி.மு.க.! சசிகலாவுக்கு நிரந்தரத் தடை!

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று எந்த பிரச்னையும் இல்லாமல் நடைபெற்றதை அடுத்து, வரும் 24ம் தேதி பொதுக்குழுவை கூட்டப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கம் போன்று இந்த முறையும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில்தான் பொதுக்குழு கூடுகிறது.


கடந்த பொதுக்குழுவில்தான் அ.தி.மு.க.வுக்கு இனி பொதுச்செயலாளர் பதவி தேவை இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளரும் துணை ஒருங்கிணைப்பாளரும் நியமனம் செய்யப்பட்டனர். அப்போது ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும் என்று பன்னீர் விடுத்த கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. அவைத்தலைவருமான மதுசூதனன் தலைமையில் பொதுக்குழு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து பொதுக்குழு, செயற்குழு உறுப்ப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முறையாவது ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுமா என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் வட்டத்தில் கேட்டபோது, அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். இன்னமும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் நான்தான் என்று சசிகலா தொடர்ந்துள்ள கேஸ் இன்னமும் நிலுவையில் இருப்பதால், கடமைக்காகவே நடத்தி முடிக்கப்படும் என்கிறார்கள்.

சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்கிறார்கள். பார்க்கலாம்.