சீமான் முன்னாள் காதலி வெளியிட்ட பரபரப்பு வீடியோ! அதிர்ச்சியில் நாம் தமிழர் தம்பிகள்!

பெங்களூரு: ''கடன் தொல்லையால் அவதிப்படும் எனக்கு யாரேனும் உதவி செய்தால் உதவிகரமாக இருக்கும்,'' என்று நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.


கடந்த 1997ம் ஆண்டு நாகமண்டலா என்ற கன்னட சினிமா படத்தில் அறிமுகமான விஜயலட்சுமி, தமிழில் பூந்தோட்டம் என்ற படத்தில் நடித்தார். பின்னர், பிரண்ட்ஸ், மிலிட்டரி, சூரி போன்ற படங்களில் நடித்த இவர், ஒருகட்டத்தில் மீண்டும் கன்னட சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். இந்நிலையில், இவர் உடல்நலக்குறைவால்  பெங்களூருவில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுளளார். மேலும், சிகிச்சைக்கு பணம் இன்றி, கஷ்டப்படுவதால், விஜயலட்சுமி குடும்பத்தினர் கன்னட திரை உலகினரிடம் உதவி கோரியுள்ளனர். எனினும், யாரும் உதவவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சினிமா நடிகர்களின் உதவியை கேட்டு, வீடியோ ஒன்றை விஜயலட்சுமி தற்போது வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்ப்பெண் என்பதால், கன்னட சினிமா நடிகர், நடிகையர் உதவ மறுப்பதாகவும், தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள் உதவினால் மிக நன்மையாக இருக்கும் என்றும் விஜயலட்சுமி குறிப்பிட்டுள்ளார். 

ஏற்கனவே, இதுபோன்ற ஒரு பிரச்சனை வந்தபோது, நடிகர் சுதிஷ் விஜயலட்சுமிக்கு உதவி செய்திருந்தார். அத்துடன், ரவிப்பிரகாஷ் என்ற நடிகர் அவருக்கு உதவி செய்ய சென்றபோது, கருத்து வேறுபாடு காரணமாக, விஜயலட்சுமி அவர் மீது பாலியல் புகார் எழுப்பினார். அதனால்தான், இந்த முறை கன்னட சினிமா உலகினர் விஜயலட்சுமிக்கு உதவ முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.