தயவு செஞ்சி என்ன காப்பாத்துங்க..! சீமானுக்கு முன்னாள் காதலி வெளியிட்ட கண்ணீர் வீடியோ!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் உதவி கேட்டு நடிகை விஜயலட்சுமி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


ஏற்கனவே நடிகை ரஜினிகாந்த்திடம் உதவி கேட்டு நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவுக்கு பதில் அளிக்கும் வகையில் உதவி செய்வதாக ரஜினிகாந்த்தும் தெரிவித்திருந்தார். 

ரஜினிகாந்த்திடம் உதவி கேட்டதை சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் அவதூறாக பேசுவதாக குற்றம் சாட்டியிருந்தார் நடிகை விஜயலட்சுமி. தன்னை பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்துமாறு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தனக்கு உதவி செய்யும்படி சீமானிடம் கேட்பது போல் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில கர்நாடகத்தில் தனக்கு பல அநியாயங்கள் நிகழ்த்தப்பட்டு உள்ளதாகவும் தனக்கு யாரும் உதவ முன்வரவில்லை எனவும் தெரிவித்து உள்ளார்.

பலமுறை உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்ற தனக்கு யாருமே பண உதவி செய்யவில்லை என கூறியுள்ளார். கர்நாடகத்தில் ஒரு தமிழ் பெண்ணுக்கு ஏற்பட்ட அநியாயத்தை தட்டிகேட்க கன்னட திரையுலகம் தயங்குவதாக குற்றம் சாட்டிய விஜயலட்சுமி, தமிழ்ப் பெண் என்ற அடிப்படையில் உதவி கேட்பதாகவும், தமிழ், கன்னடம் என பார்த்து பேச பயப்படுபவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது தன்னிடம் ஆயிரம் ரூபாய் கூட இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார் விஜயலட்சுமி. முன்னதாக சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும் தாங்கள் இருவரும் காதலித்ததாகவும் காவல் நிலையத்தில் விஜயலட்சுமி புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.