படப்பிடிப்பு தளத்தில் வாந்தி, மயக்கம்! பிரபல நடிகையின் தாயார் வெளியிட்ட ஷாக் தகவல்!

திரிஷா மயக்கம் போட்டு விழுந்ததாக வரும் செய்தியில் உண்மையில்லை என்று, தகவல் வெளியாகியுள்ளது.


எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணனின் புதிய படத்திற்கு, ராங்கி எனப் பெயரிடப்பட்டுள்ளது.  லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸின் கதையில் உருவாகும் இந்த படத்தில், திரிஷா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இதன்போது, படப்பிடிப்புத் தளத்தில் திரிஷா மயக்கம்போட்டு விழுந்ததாக, சமூக ஊடகங்களில் வதந்தி பரவுகிறது.

ஆனால், இதனை ராங்கி படக்குழு மறுத்துள்ளது. அப்படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்றும், படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில், திரிஷா தற்போது வெளிநாட்டில் சுற்றுலா சென்றுள்ளார் என்றும், ராங்கி படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. திரிஷா பற்றி வதந்தி பரப்புவதையே சிலர் வேலையாக வைத்துள்ளனர் எனவும், ராங்கி படக்குழு கண்டித்துள்ளது. இதே போல் த்ரிஷாவின் தாயார் உமாவும் தனது மகள் மயங்கவில்லை என்று கூறியுள்ளார்.

தன்னுடைய மகள் பற்றி இப்படி வரும் தகவல்கள் ஷாக்காக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வெளிநாடு சுற்றுப்பயணத்தில் உள்ள திரிஷா, மே 4ம் தேதி,  அதாவது, அவரது பிறந்த நாளுக்கு முன்பாக, சென்னை திரும்புகிறார். அப்போது, அவரின் 60வது படமான பரமபத விளையாட்டு டிரெய்லர் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. கடந்த 16 ஆண்டுகளாக, திரிஷா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.