அந்த நடிகைகயை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்: கமல் மகளின் விபரீத ஆசை!

பிரபல நடிகையை திருமணம் செய்திருப்பேன்,'' என்று அதிரடியாக ஸ்ருதி ஹாசன் மனம் திறந்து பேசியுள்ளார்.


சினிமா நடிகைகளில், சீனியர் தமன்னா. ஆனால், 15 ஆண்டுகளாக, திருமணம் செய்யாமல் அவர் காலம் கடத்தி வருகிறார். முன்னணி நடிகர்களுடன் அவ்வப்போது கிசுகிசுவில் தமன்னா சிக்கினாலும், அவர் யாரையும் கமிட் செய்யவில்லை.

அத்துடன், நல்ல தமிழ் பையன் கிடைத்தால் திருமணம் செய்ய தயார் என்று பச்சைக் கொடி காட்டியும் உள்ளார். மறுபுறம், நடிகை ஸ்ருதி ஹாசன், தொடர்ச்சியாக சினிமா படங்களில் நடித்து வந்ததை நிறுத்திக் கொண்டு, தற்காலிக பிரேக்கில் உள்ளார்.

அவரது பாய் ஃபிரெண்ட் மைக்கேல் கோர்சேல் கூட சேர்ந்துகொண்டு, இசை, கச்சேரி என நாட்களை கடத்தி வருகிறார். இந்நிலையில், தமன்னாவுடன் நெருங்கிய நட்புறவு பாராட்டி வரும் ஸ்ருதி ஹாசன், அவரை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில், பார்த்தாலே கொள்ளை அழகியாக, பால் போன்ற வெண்ணிற தேவதையாக வலம் வரும் தமன்னாவை பார்த்தால் எனக்கு பொறாமையாக உள்ளது. ஆணாக பிறந்திருந்தால், தமன்னாவை நானே இந்நேரம் திருமணம் செய்திருப்பேன், என்று ஸ்ருதி ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.