நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட முதல் வீடியோ! சிக்கலில் பைனான்சியர்!

நடிகை ஸ்ரீரெட்டி, சினிமா ஃபைனான்சியர் ஒருவரின் ஆடியோ, வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.


சக நடிகர்கள், இயக்குனர்கள் பற்றி அதிரடியாக பாலியல் புகார்களை கூறி, நடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளைச் சேர்ந்த முன்னணி நடிகர், இயக்குனர்கள் இவரது புகார்களில் சிக்கியுள்ளனர். 

இந்நிலையில், கடந்த 22ம் தேதியன்று, சென்னை வளசரவாக்கத்தில் ஸ்ரீதேவி புகார் ஒன்றை அளித்தார்.  அதில், தனது வீட்டுக்கு வந்து, சில பேர் தன்னை தாக்க முயன்றதாகவும் கூறியிருந்தார். அதன்பேரில், இன்று (மார்ச் 26) சில ஆடியோ, வீடியோ ஆதாரங்களை, ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ளார். 

சினிமா ஃபைனான்சியர் சுப்ரமணியம் என்பவர், மேலும் 2 பேருடன் சேர்ந்துகொண்டு, ஸ்ரீரெட்டியின் வீட்டுக்கு வந்து, அவரிடம் தவறாக நடக்க முயன்றதோடு, அவரை தாக்கவும் முயன்றதாகக் கூறப்படுகிறது. இதன்பேரில்தான், சிசிடிவி ஆதாரம் மற்றும் தனக்கு ஃபோனில் விடப்பட்ட மிரட்டல் ஆகியவற்றை பதிவு செய்து, தற்போது வெளியிட்டுள்ளதாக, ஸ்ரீரெட்டி குறிப்பிட்டுள்ளார். 

மேலும், நள்ளிரவு 11.30 மணிக்கு, தன்னை சந்திக்க வருவதாகக்கூறியிருந்த சுப்ரமணியும், நேரம் கடந்து வந்து, உள்ளே விடும்படி கூறி, தனது மேலாளரிடம் வாக்குவாதம் செய்தார். இதைக் கண்டித்தபோது, என்னையும் அவர் தாக்க முயன்றார் என்றும், ஸ்ரீரெட்டி தனது புகாரில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.