பிரபல நடிகையின் கள்ளக்காதலனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படை! விமானத்தில் பரபரப்பு!

வங்க தேசத்தில் விமானத்தைக் கடத்த முயன்று பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபருக்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.


டாக்காவில் இருந்து துபாய்க்கு சென்ற விமானத்தில் இருந்த ஒரு பயணி திடீரென எழுந்து விமானி அறைக்குச் செல்ல முயன்றார். தன்னை தடுக்க முயன்ற விமான ஊழியரை துப்பாக்கி முனையில் வளைத்துப் பிடித்தான் அவர்.

 

தனது உடலில் வெடிபொருட்களை வைத்திருப்பதாகவும் விமானத்தை தரையிறக்குமாறும் மிரட்ட விடுத்ததைத் தொடர்ந்து விமானம் சிட்டகாங்கின் ஷா அமானத் சர்வதேச் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

 

இதையடுத்து விமானி அறைக்குச் சென்ற அவர் தனக்கும் தனது மனைவிக்கும் பிரச்சினைகள் இருப்பதாகவும் பிரதம ஷேக் ஹசீனாவுடன் பேச வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் விமானத்துக்குள் நுழைந்த அதிரடிப்படையினர் அவரை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

 

ஆனால் அவர் உடன்பட மறுத்ததொடு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விமானத்தை கடத்தப் போவதாகத் தெரிவித்ததையடுத்து அதிரடிப்படையினர் அவரை துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

 

அவர் உடலில் வெடி பொருட்கள் இல்லை என்றும் அவர் வைத்திருந்தது பொம்மைத் துப்பாக்கி என்றும் தெரிவித்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த நபரின் பெயர் முகமது போலாஷ் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்ததாகவும் தெரிவித்தனர்.  

 

இந்நிலையில் அவர் உயிரிழந்தது முதல் அந்த நபர் மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அது அவரது மனைவியாக இருக்கக் கூடும் என கருதப்பட்ட நிலையில் உள்ளூர் நடிகை ஒருவருடன் தனது மகன் தொடர்பில் இருந்ததாக முகமது பொலாஷின் தந்தை தெரிவித்துள்ளார்

 

இதனிடையே அந்த நடிகையை விமானத்தை கடத்த முயன்றவன் 2வதாக திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தான் விமானத்தை கடத்தி பிரச்சனையை தீர்க்க முயன்றதாகவும் சொல்கிறார்கள்.