வெள்ள நிவாரணத்திற்கு புற்றுநோய் சிகிச்சை பணம்! நெகிழ வைத்த நடிகை!

கன மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி கேரள மாநில மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற நிதி, பொருள் உதவிகளை அம் மாநில மக்களுக்கு செய்து வருகின்றனர்.


கேரள மாநிலத்தில் மலையாள மொழி சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ள நடிகை சரண்யா புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 6 வருடங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கன்னூர் மாவட்டம் பழயாங்கடியில் இன்றும் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

தனக்கு வரும் சம்பளம் முழுவதும் இதுவரை நடிகை சரண்யா செய்து கொண்ட 7 அறுவை சிகிச்சைகளுக்கு செலவாகி விட்டது. இது குறித்து சில தினங்களுக்கு முன்னர் கேரள மாநில திரை பிரபலங்களுக்கு கோரிக்கை ஒன்றை நடிகை சரண்யா விடுத்திருந்தார்.

அதில் தான் புற்றுநோயால் அவதிப்படுவதால் அனைத்து பணமும் கடந்த 7 முறை செய்த அறுவை சிகிச்சைக்கு செலவழிந்து விட்டதாகவும் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று மற்றொரு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். எனவே தங்களால் ஆன பண உதவியை செய்யுமாறு கண்ணீர் மல்ல நடிகை சரண்யா குறிப்பிட்டிருந்தார்.

இதைப் பார்த்த கேரள திரையுலகினர் தங்களால் ஆன பண உதவி செய்து கொடுத்தனர். இந்த நிலையில் கேரளாவில் கனமழை வெள்ளத்தால் மீட்பு பணிகள் நடைபெறுவதை பார்த்த நடிகை சரண்யா தன்னுடைய திரைப்படங்களையும் சீரியலையும் பார்த்து ஆதரவளித்து வரும் அம் மாநில மக்களுக்கு ஏதாவது தன்னால் இயன்ற உதவி செய்ய வேண்டும் என விரும்பினார்.

உடனே தன்னுடைய 8வது அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் ஒரு பகுதியை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளது அனைவரையும் மூக்கின் மேல் விரலை வைத்து ஆச்சரியப்படுத்தி உள்ளது. எந்த மாநிலத்திற்கு என்ன பிரச்சனை என்றால் என்ன தன் குடும்பம்தான் முக்கியம் என சில திரையுலக பிரபலங்கள் இன்றும் வாழ்ந்து வரும் நிலையில் குணப்படுத்த முடியாத புற்று நோயால் அவதிப்படும் நடிகை சரண்யாவின் இந்த மனிதே நேயகத்தை கண்டிப்பாக எழுந்து நின்றே நாம் பாராட்டி ஆகவேண்டும்.

நடிகை என்றாலே ஏதே தவறானவர்கள் என்று சமூக வலைதளங்களில் கண்டமேனிக்கு அவதூறாக பேசும் இளைஞர்கள் சரண்யா போன்ற மனித நேயமிக்கவர்களை பார்த்த பின்னாவது அவர்களின் பிரச்சனைகளை அறிந்து அவர்களையும் நம்மில் ஒருவராக கருதி நாகரீகமாக நடந்து கொண்டால் சிறப்பு