கர்ப்பமான நிலையிலும் ஹாட் புகைப்படம்! நடிகை சமீரா ரெட்டியை சீண்டிய ரசிகர்!

வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஏகோபித்த ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் நடிகை சமீரா ரெட்டி. இவருக்கு தற்போது 38 வயதாகிறது.


இவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவருடன் திருமணமானது. திருமணமான பின்னர் இவர் படங்களில் நடிக்கவில்லை. இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

 இந்நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமாக்கி உள்ள சமீரா, தன் கர்ப்பமான புகைப்படத்தை சமூக வலை தளங்களில் வெளியிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர், ‘ஒரு கர்ப்பமான பெண்ணை போல் உடை அணியுங்கள்’ இது நன்றாக இல்லை என்று தெரிவித்திருந்தனர்,

 இதனை பார்த்து கடுப்பான சமீரா ரெட்டி… ‘இங்கு இருக்கும் அனைவரும் கரீனா கபூர் இல்லை’ கர்ப்பமாகவும், அழகாகவும் தெரிய அவரால் மட்டுமே முடியும். இதனால் என் உடலை பற்றி நீங்கள் பேசாதீர்கள் என்று காட்டமாக பேட்டி அளித்துள்ளார்.