நள்ளிரவில் முன்னாள் காதலனுக்கு ஓவியா கொடுத்த சான்ஸ்! வைரலாகும் போட்டோ!

நடிகை ஓவியா களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பிரபலமானவர். அதன் பின்னர் அவருக்கு படங்களில் நடிக்க சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.


 இதனால் பிக் பாஸ் தொடரின் முதல் சீசனில் கலந்து கொண்டார். அதில் கலந்து கொண்டதால் அவருக்கு மிகப் பெரும் பிரபலம் கிடைத்தது.

 அதனுடன் சேர்த்து ஒரு காதலரும் கிடைத்தார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது தன்னுடன் அந்த போட்டியில் கலந்துகொண்ட சக நடிகர் ஆரவ்வை காதலித்தார். இருவரும் கிட்டத்தட்ட காதலித்து கடைசியில் தான் ஓவியாவை காதலிக்கவில்லை என்று பகிரங்கமாகக் கூறினார் ஆரவ்.

இதனால் விரக்தியில் இருந்த ஓவியா அந்த வீட்டை விட்டு வேண்டுமென்றே வெளியேறி மனமுடைந்து சில மாதங்கள் இருந்தார். பின்னர் இயல்புநிலைக்கு திரும்பிய ஓவியாவும் ஆரவும் தற்போது நண்பர்களாக இருக்கின்றனர் என்று செய்திகள் வந்துள்ளது

. இந்நிலையில் இன்று தனது 28வது பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார் நடிகை ஓவியா அதனை தனது முன்னாள் காதலர் ஆரவுடன் சேர்ந்து கொண்டாடி அசத்தியுள்ளார். மேலும் ஆரவ் தனது முன்னாள் காதலி ஓவியாவிற்கு ஒரு குட்டி நாயை பரிசளித்ததாகவும் தெரிகிறது.