எந்நேரமும் குடி..! முழு போதை..! காரணம் கேட்டால் கதறி அழுகை..! விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகையின் இன்றைய பரிதாப நிலை!

வாழ்க்கையில் சினிமாவில் மட்டுமே சாதிக்க முடியும் என தப்பு தப்பாய் கணக்கு போட்ட நடிகை ஒருவர் வாழ்க்கையை தொலைத்து கணவரையும் விரட்டி போதைக்கு அடிமையாகி சின்னாபின்னமாகி விட்டார் நடிகை ஒருவர்.


தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகை அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. அடுத்து அடுத்து படங்கள் குவிந்த நிலையில் டாப் ஹீரோக்கள் எல்லாம் போட்டி போட்டு தங்கள் படங்களில் அவரை நடிக்க வைத்தனர். இந்நிலையில் தன்னை அறிமுகம் செய்த இயக்குநரை காதலித்து திருமணம் செய்த கொண்ட அந்த நடிகை சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றார். இல்லற வாழ்க்கையின் இன்பம் நீண்ட நாள் நீடிக்கவில்லை அந்த நடிகைக்கு.

அடிக்கடி கணவருடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட நடிகைக்கும், கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, கணவரை விவாகரத்து செய்து விட்டால் மீண்டும் சினிமா வாய்ப்புகள் வரும் என தப்பாக யோசனை செய்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சில குணச்சித்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த போதும், அந்த படங்களும் பெரிதாக ஓடவில்லை.  

தமிழ், மலையாளம், தெலுங்கு என கொடிக்கட்டி பறந்த அந்த நடிகை கடைசியில் மதுபானத்திற்கு அடிமையானார். கிடைக்கும் ஒரு சில வாய்ப்புகளை கூட பயன்படுத்தி கொல்லாமல் குடித்து கொண்டே இருக்கிறாராம். தற்போது அந்த நடிகையை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென அவரது நண்பர்கள் சினிமா உலகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

நாமும் பொருத்து இருந்து பார்ப்போம். நட்சத்திரம் பட்டை தீட்டப்படுகிறதா அல்லது காட்சிப் பொருளாக்கப்படுகிறதா என்பதை...