கணவன் இறந்த போது ஆறுதலாக இருந்தார்..! 2வது திருமணம் செய்தது குறித்து மைனா வெளியிட்ட சீக்ரெட்!

சமீபத்தில் சீரியல் நடிகை நந்தினிக்கு இரண்டாவது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.


பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மூலம் பிரபலமானவர் நடிகை நந்தினி. அந்த சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததால் மைனா நந்தினி என்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து நடிகை நந்தினி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் ஆக பணிபுரிந்து வந்த கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திகேயன் மனமுடைந்து லாட்ஜில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.  

கார்த்திகேயனின் மரணத்திற்கு நந்தினியும் அவரது தந்தையும் தான் காரணம் என்று கார்த்திகேயனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். தற்போது அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நடிகை மைனா நந்தினி, சீரியல் நடிகரான யோகேஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார் இவர்களது திருமணம் திரை பிரபலங்கள் மற்றும் குடும்பத்தார் முன் பிரமாண்டமாக நடைபெற்றது.

தற்போது திருமணம் முடிந்த நிலையில் நடிகை மைனா நந்தினி தான் எதற்காக யோகேஷை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன் என்றும் மனம் திறந்துள்ளார். அதாவது நடிகை நந்தினியும் நடிகர் யோகேஷ் நீண்டகாலமாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதனையடுத்து இவர்களது நட்பு காதலாக மாறிவிட்டது.

பின்னர் யோகேஷ் அவரது வீட்டாரிடம் நான் நந்தினியை காதலித்து வருவதாக கூறி இருக்கிறார். உடனே யோகேஷின் பெற்றோர் நந்தினியின் வீட்டில் உள்ள பெரியவர்களை சந்தித்து திருமணத்தை நிச்சயம் செய்துள்ளனர். பின்னர் நீண்ட யோசனைக்குப் பின்பு நடிகை நந்தினியும் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார். ஏற்கனவே முதல் திருமண வாழ்க்கை மோசமாக அமைந்த நிலையில் இரண்டாவது திருமணம் நிலைத்து நிற்க வேண்டும் என்ற யோசனையில் இருந்தபோது நடிகர் யோகேஷ் நந்தினிக்கு அளித்த அன்பும் நம்பிக்கையும் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளதாகவும் நடிகை நந்தினி கூறினார்.