நான் ஆம்பள..நான் ஆம்பள..! விஜய் டிவிக்கு எதிராக கொதிக்கும் கஸ்தூரி! காரணம் இது தான்..!

ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் புரோமஷனை பார்த்த நடிகை கஸ்தூரி கடுப்பாகி கடுமையாக விமர்சித்துள்ளார்.


பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒருவாரம் ஆகியும் அதற்கான பரபரப்புகளும், சர்ச்சைகளும் ரசிகர்களிடையே இன்னும் முடிந்தபாடில்லை. இந்நிலையில் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் சீசன் 3 வீடியோவை புரமோஷன் செய்ய ஒரு புரேமோ அடிக்கடி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதை பார்த்த நடிகை கஸ்தூரி அந்த வீடியோ குறித்து கடுமையாக விமர்சித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்படி என்னதான் இருக்கிறது அந்த புரோமோவில் என பார்த்தால், அதில் கவின், தர்ஷன், முகேன், சாண்டி ஆகியோர் வீ ஆர் தி பாய்ஸ், வீ ஆர் தி பாய்ஸ் என்ற பாடல் பெண்களை வெறுப்பேத்துவது போல் வருகிறது. இந்த வீடியோவை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள கஸ்தூரி, விஜய் டிவியின் ரசனை மிக மட்டமாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். நான் ஆம்பள, நான் ஆம்பள என ஏன் தனக்குத் தானே ஊளையிடுவது போல் வீடியோ தயார் செய்யவேண்டும் என கேட்டுள்ளார்.

இதற்கிடையே தூத்துக்குடியில் கல்லூரி விழாவில் பங்கேற்றிருந்த கஸ்தூரி பெண்கள் பாதுகாப்பிற்கு நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய நிகழ்ச்சி கிடையாது என்றும் தெரிவித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி பெண்களின் மதிப்பை குறைத்த மதிப்பிடும் நிகழ்ச்சியாகத்தான் இருந்தது எனவும் பேசியுள்ளார் கஸ்தூரி.