என்னை படுக்கைக்கு அழைத்த பெரிய மனிதர்கள்! நடிகை கஸ்தூரி வெளியிட்ட ஷாக் தகவல்!

தன்னை படுக்கைக்கு சமுதாயத்தில் பெரிய பெரிய அந்தஸ்தில் இருக்கும் மனிதர்கள் எல்லாம் அழைத்ததாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.


நடிகை கஸ்தூரி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் சரி பொது விஷயங்களைப் பற்றியும் சரி வெளிப்படையாக பேசக்கூடியவர். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அளித்த வார இதழ் பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டியில் திரையுலகில் இருக்கும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக ஏற்படும் தொந்தரவுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் கஸ்தூரி. அப்போது அவரிடம் உங்களை யாரேனும் பாலியல் ரீதியாக சீண்டி உள்ளனரா உங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு தன்னுடைய வாழ்க்கையிலும் பாலியல் சீண்டல்கள் எதிர்கொண்டதாக கஸ்தூரி தெரிவித்துள்ளார். பிரபலமான நடிகராக இருந்ததுடன் அரசியலிலும் இருக்கும் நடிகர் ஒருவர் ரயிலில் வைத்து தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக கஸ்தூரி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும் விழாக்களுக்கு செல்லும்போது அங்குள்ள பெரிய மனிதர்கள் தன்னை தவறான கண்ணோட்டத்தில் பார்த்துள்ளதாகவும் படுக்கைக்கு வருமாறு அழைத்ததாகவும் கஸ்தூரி கூறியுள்ளார். ஆனால் அந்த அழைப்புகளை எல்லாம்தான் நாசுக்காக மறுத்துள்ளதாகவும் தற்போதும் கூட மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வருவதாகவும் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

தன்னை படுக்கைக்கு அழைத்த பெரிய மனிதர்களின் பட்டியலைத்தான் வெளியிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார் கஸ்தூரி