நடிகை கஸ்தூரி கேட்ட ஒரே ஒரு கேள்வி! சைலன்ட் மோடுக்கு சென்ற கனிமொழி! ட்விட்டர் பரிதாபங்கள்!

மாட்டிறைச்சி தொடர்பாக திமுக எம்பி கனிமொழி யும் நடிகை கஸ்தூரியின் ட்விட்டர் பக்கத்தில் மோதிக் கொண்டனர்.


மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல் மாட்டிறைச்சி அரசியல் தொடங்கியது. மாட்டிறைச்சி உண்பது உரிமை என்றும் மாடுகள் தெய்வம் என்பதால் அதன் இறைச்சியை உண்ணக் கூடாது என்றும் இருவேறு தரப்பினர் மோதுவது தொடர்கதையாகி வருகிறது.

மாட்டிறைச்சி விற்பது சில மாநிலங்களில் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது அதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் தடையையும் மீறி மாட்டிறைச்சி உண்போரும் விற்போரும் கும்பலாக சேர்ந்து கொண்டு தாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது.

அன்மையில் மாட்டிறைச்சி சூப் குடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட நபர் வீடு புகுந்து தாக்கப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பினை பதிவு செய்தார். எதை உண்பது என்பது தீர்மானிப்பது என்பது உண்பவர் மட்டுமே மற்றவர் அல்ல என்று கனிமொழி பதிவிட்டிருந்தார்.

இதைக் குறிப்பிட்டு பதிலுக்கு டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, 60 ஆண்டு காலம் திராவிட கட்சிகள் அந்த தமிழ்நாட்டில் அடுத்த வேளை உணவு கிடைக்குமா  என்பதை தீர்மானிக்கும் நிலையில் பல குடும்பங்கள் இல்லை என்று கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு தெரிந்த சில மதங்களில் உணவுக் கட்டுப்பாடுகள் இருப்பதாகவும், கனிமொழி அவர்கள் அந்த மதங்களை குறை கூறுகிறார் என்றும் கஸ்தூரி சாடியுள்ளார்.