என்னை படுக்கைக்கு வரவழைக்க என் அம்மாவிடம் பேரம் பேசுகிறார்கள்! நடிகை திடுக் தகவல்!

தன்னை படுக்கைக்கு வரவழைக்க தனது தாயாரிடம் இயக்குனர்களும், நடிகர்களும், தயாரிப்பாளர்களும் பேரம் பேசுவதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.


மிஷ்கின் இயக்கத்தில் தமிழில் வெளியான பிசாசு படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் கனி ஸ்ருதி. கேரளாவை சேர்ந்த இவர் பர்மா எனும் படத்திலும் நடித்துள்ளார். ஆனால் மா எனும் குறும்படம் மூலம் தான் இவர் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயம்.

மலையாளத்திலும் கனி காக்டெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் தற்போது படங்கள் எதிலும் நடிக்காமல் திரையுலகில் இருந்து கனி ஒதுங்கியுள்ளார். நடிக்கத் தெரிந்த நடிகையான கனி திரையுலகில் இருந்து ஒதுங்கியது ஏன் எனும் கேள்வி எழும்பியது.

இது குறித்து பேசிய கனி ஸ்ருதி, திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த காலம் முதலே பல்வேறு இயக்குனர்களும், நடிகர்களும், தயாரிப்பாளர்களுக்கும் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் படங்களில் தொடர்ந்து வாய்ப்பு வழங்க தன்னை இயக்குனர்கள் படுக்கைக்கு அழைத்ததாகவும் கனி தெரிவித்துள்ளார்.

தான் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளாத காரணத்தினால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கனி கூறியுள்ளார். இதில் கொடுமை என்ன என்றால் என்னை படுக்கைக்கு வர சம்மதிக்கச் செய்யுமாறு சில இயக்குனர்கள் எனது தாயராரிடமே பேரம் பேசியுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

படுக்கைக்கு சென்று தான் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற நிலை தனக்கு இல்லை என்று கனி கூறியுள்ளார். அதே சமயம் தன்னுடைய உடலை எதிர்பார்க்காமல் வாய்ப்பு கொடுத்தால் நடிக்க தயாராகவே இருப்பதாகவும் கனி கூறியுள்ளார்.