ஒரு மணி நேரத்திற்கு ரேட் எவ்ளோ? எப்போ வரலாம்? சாண்டியின் முதல் மனைவிக்கு வித்தியாசமான டார்ச்சர்!

சென்னை: நடிகை காஜல் பசுபதிக்கு மர்ம நபர் ஒருவர் ஃபோனில் தொல்லை தருவதாகப் புகார் எழுந்துள்ளது.


நடிகை காஜல் பசுபதி, பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்று பிரபலமானவர். இவரது கணவர்தான் நடன கலைஞர்  சாண்டி. அவரை விவாகரத்து செய்த நிலையில் தற்போது தனியாக வாழ்ந்து வரும் காஜல் பசுபதி, ட்விட்டரில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும், அன்றாட நடப்புகள் பற்றியும் விமர்சிப்பது வழக்கம்.

இவருக்கு ட்விட்டரில் ஏராளமான ரசிகர்களும் உண்டு. இந்நிலையில், தனக்குத் தெரிந்த ஒருவர் தொலைபேசி மூலமாக அடிக்கடி டார்ச்சர் செய்வதாக, காஜல் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

இதன்படி அவரது பதிவில், ''இந்த நபர் பற்றி ஏற்கனவே போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால், பணத்தை வாங்கிக் கொண்டு போலீசார் அவரை வெளியில் விட்டுவிட்டனர். தற்போது எனக்கு விதவிதமான தொலைபேசி எண்களில் இருந்து தினமும் ஃபோன் செய்தும், ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியும் இந்த நபர் டார்ச்சர் செய்கிறார். இவர் மீது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?,'' என்று காஜல் கூறியுள்ளார்.  

சாதாரண ஆயா நம்பர் கிடைத்தாலே சும்மா விடாத சமூகம் சார் இது, காஜல் பசுபதியை சும்மா விடுமா, என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.