மகளிடம் பொது இடத்தில் செய்யும் காரியமா இது? ஐஸ்வர்யா ராயை கிழிக்கும் ரசிகர்கள்!

நடிகை ஐஸ்வர்யா ராயை தெரியாத சினிமா ரசிகர்களே இல்லை. அவருக்கு தற்போது 45 வயதாகிறது.


கர்நாடகாவைச் சேர்ந்த இவர் 1994 ஆம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றவர். இந்தியாவின் சார்பில் முதன்முதலாக மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்ற வரும் இவரே.

இவர் படங்களில் நடிக்கும்போது 1999 ஆம் ஆண்டு சல்மான்கானை காதலித்தார். அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர் .பின்னர் 2007 ஆம் ஆண்டு அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா ராய். இதில் ஐஸ்வர்யா ராய் அபிஷேக்பச்சனை விட மூன்று வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதற்கு ஆரத்யா என பெயர் வைத்தனர் . ஆரத்யாவின் பாதுகாப்பில் எப்போதும் குறியாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் வெளியில் அவரைக் கூட்டி வரும் போது அவரது இரண்டு கைகளையும் பிடித்து கூட்டி வருவார் 

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏன் இவ்வளவு இறுக்கமாக உங்களது குழந்தையை பிடித்துள்ளீர்கள். அவருக்கு சுதந்திரத்தை வழங்குங்கள் என்பது போல ஐஸ்வர்யா ராயை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.