ஒரு நாள் இளம் தலைவர்! மறு நாள் இளம் நடிகர்! 2 லட்டு சாப்பிடும் பிரபல நடிகை!

மும்பை: யுவ சேனா தலைவர் ஆதித்ய தாக்கரே, நடிகை திஷா படானியுடன் டின்னர் சாப்பிட்ட விசயம் பரபரப்பாகியுள்ளது.


நடிகை திஷா படானி தனது 27வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவருடன் யுவ சேனா தலைவர் ஆதித்ய தாக்கரே நெருங்கி பழகி வருகிறார். இதன்படி, இருவரும் சில நாட்கள் முன்பாக, ஒன்றாக டின்னர் சாப்பிட்டனர். அப்போது, பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்கவே, வெட்கத்தில் ஆதித்ய தாக்கரே முகம் சிவந்து போனார்.

இருவரும் நட்பாக பழகி வருவதாக, அவர் சொல்லிவிட்டுப் போனார். பின்னர், ஜூன் 13ம் தேதி அன்று திஷாவை தனது வீட்டிற்கே அழைத்து விருந்து வைத்துள்ளார். இதே போல் கடந்த மாதமும் திஷாவுடன் தாக்கரே டேட்டிங் சென்று இருந்தார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால் இளம் நடிகர் டைகர் ஷெராப்புடனும் நடிகை திஷா டேட்டிங் சென்று வருகிறார். இருவரும் ஒன்றாக வெளிநாடுகளில் சுற்றித் திரிந்தனர். மும்பையிலும் கூட இவர்களை ஒன்றாகவே பார்கக் முடியும்.

இப்படி ஒரே நேரத்தில் இளம் அரசியல் தலைவரையும் இளம் நடிகரையும் திஷா எப்படி மெயின்டெய்ன் செய்கிறார் என்று திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.