முதல் நாளிலேயே குரூப் செ**ஸ் பத்தி பேசுறாங்க..! லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு எதிராக நடிகை கூறிய பகீர் புகார்!

சென்னை: குரூப் செக்ஸ் பற்றியெல்லாம் பேசக்கூடிய சொல்வதெல்லாம் உண்மை ஷோவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று நடிகை ரஞ்சனி தெரிவித்துள்ளார்.


நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை என்ற பெயரில் நடத்தி வரும் டிவி ஷோ மிகப் பிரபலமான ஒன்றாகும். இதில், ஏராளமான கள்ளக்காதல் விவகாரங்களுக்கு அவர் கட்டப்பஞ்சாயத்து செய்வது வழக்கம். எனினும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள், அவர்கள் பேசும் விசயங்கள் மிகவும் கீழ்த்தரமாக இருப்பதாகக் கூறி, ஏற்கனவே பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல, நடிகைகள் ஸ்ரீப்ரியா, 'முதல் மரியாதை' பட நடிகை ரஞ்சனி உள்ளிட்டோர் கூட லட்சுமி ராமகிருஷ்ணனிடம் நேரடியாகச் சண்டையிட்டுள்ளனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக, ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, போலீஸ் தலையிட்டு, இந்த நிகழ்ச்சியை முடித்து வைத்தனர். தற்போது,  

சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்த நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சியை பார்த்த ரஞ்சனி, வன்மையாகக் கண்டித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். மேலும் இதுபற்றி வார இதழ் ஒன்றில் பேட்டி அளித்துள்ள ரஞ்சனி, ''குடும்பப் பிரச்னைகளுக்கு டிவி நிகழ்ச்சி மூலமாக பஞ்சாயத்து செய்வது சட்டப்படி தவறாகும்.

இதுபற்றி உச்சநீதிமன்றம் கூட உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்படியிருக்கும் சூழலில் சினிமா நட்சத்திரங்களை வைத்து சிலர் சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அது மிகவும் தவறான செயலாகும். இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை தடை செய்ய சில மாதங்களுக்கு முன்பாக நான் முயற்சி மேற்கொண்டேன். ஆனாலும், தற்போது மீண்டும் அத்தகைய நிகழ்ச்சியை நடத்த தொடங்கியுள்ளனர்.  

அதிலும் அந்த நேர்கொண்ட பார்வை நிகழ்ச்சியின் முதல் எபிசோடு மிகவும் அருவருப்பாக இருந்தது. குரூப் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுகிறார்கள். இதனை பார்க்கும் மக்கள் என்ன நினைப்பார்கள். இப்படி பகிரங்கமாக குரூப் செக்ஸ் பற்றி விவாதிக்கும் நேர்கொண்ட பார்வை நிகழ்ச்சியை நீதிமன்றமோ, மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணையமோ நேரடியாக தலையிட்டு தடை செய்ய வேண்டும்.

அதற்கான சட்டப் பணிகளை நான் தொடங்கியுள்ளேன்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.