படப்பிடிப்பில் ஆடைகளை களைந்து, அந்த இடத்தில் தொட்டு! டிவி நடிகை வெளியிட்ட பகீர் தகவல்கள்!

இணையதளத் தொடர் இயக்குநரும், பெண் தயாரிப்பாளரும் தன்னை கட்டாயப்படுத்தி நிர்வாணமாக நடிக்க வைத்துவிட்டதாகவும், மற்றொரு பெண்ணுடன் பாலியல் காட்சிகளில் நடிக்க கட்டாயப்படுத்தியதாகவும், அளித்த புகாரின் பேரில் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


மும்பை அந்தேரியில் வசிக்கும் 22 வயது நடிகை பல்வேறு டி.வி. தொடர்களில் நடித்தவர். அவரது நண்பர் மூலம் இணையதளத் தொடரின் இயக்குநரான ரவிகாந்த் சிங்கும், பெண் தயாரிப்பாளரான ஸ்வேதா சிங்கும் கடந்த 7-ஆம் தேதி அறிமுகமானார்கள். கடந்த 9-ஆம் தேதி அவர்களின் இணைய தளத் தொடரில் நடிக்கும் ஒப்பந்தத்தில் நடிகை கையெழுத்திட்டார். 

இந்நிலையில் மால்வானி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ஒப்பந்தத்தை படித்துப் பார்க்க அவகாசம் அளிக்காமல் தன்னை அவசரப்படுத்தி அவர்கள் கையெழுத்தைப் பெற்று விட்டதாகத் தெரிவித்த நடிகை, எனினும் வாய்மொழியாக தான் ஆபாசக் காட்சிகளில் நடிக்க முடியாது என தெரிவித்ததாகக் கூறினார். 

ஆனால் 12-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கிய போது அவர்கள் இருவரும் தன்னை கட்டாயப் படுத்தி ஆபாசக் காட்சிகளில் நடிக்கச் செய்ததாகவும், சில நிர்வாணக் காட்சிகளிலும் நடிக்க வைத்ததாகவும் தெரிவித்தார். மேலும் ஸ்வேதா சிங் தனது மார்பகம் உள்ளிட்ட தொடக்கூடாதை இடங்களில் தன்னை தொட்டுக்காட்டி அதே போன்று மற்றொரு நடிகையை தொட்டு நடிக்க கட்டாயப் படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மறுநாளில் இருந்து தான் படப்பிடிப்புக்குச் செல்லவில்லை என்றும் இதையடுத்து  பெண் தயாரிப்பாளர் ஸ்வேதா சிங் தனது  வீட்டுக்கு வந்து ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி தன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்போவதாகவும், ரவுடிகளை வைத்து தாக்கப் போவதாகவும் மோசமாக மிரட்டியதாகவும் இதையடுத்து தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தாக  கூறியுள்ளார்.

இதையடுத்து இயக்குநர் ரவிகாந்த் சிங், தயாரிப்பாளர் ஸ்வேதா சிங் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.