கணவன் செக்ஸ் கொடுமை! வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட நடிகை!

நடிகை அர்சூ கோவித்ரிகர் தனது கணவன் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதாக மும்பை காவல் நிலையம் ஒன்றில் புகார் அளித்துள்ளார்.


பெரும்பாலும் நடிகைகளின் திருமணங்கள் ஆடம்பரமானதாகவும், பெருமைக்குரியதாகவும் ஊடகங்கள் மூலம் காட்டப்பட்டாலும் அவர்களில் பலரது வாழ்க்கை திருமணத்துக்குப் பின் பரிதாபத்துக்குரியதாகவே இருக்கிறது. அவர்களின் தொழில் சார்ந்த சூழ்நிலைகள் தொடர்பான கணவனின் சந்தேகங்கள் நடிகைகளின் வாழ்கையை நரகமாக்கி விடுகின்றன.

அப்படி ஒரு நரகத்தில்தான் உழன்று கொண்டிருக்கிறார் நடிகை அர்சு கோவித்ரிகர்.நடிகை அதிதி கோவித்ரிகரின் சகோதரியான நடிகை அர்சு கோவித்ரிகர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபரான சித்தார்த் சபர்வால் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணமானது முதல் சித்தார்த் தன்னை அவ்வப்போது அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக அர்சு கோவித்ரிகரை வொர்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் கடந்த மாதம் 15-ஆம் தேதி சித்தார்த் சபர்வால் மது அருந்தியிருந்ததாகவும், அன்று அதிகாலை 4 மணியளவில் தன்னை குளியலறையில் இழுத்துப் போட்டுத் தாக்கியதாக அர்சு புகாரில் கூறியுள்ளார். தனது கணவன் மது அருந்திவிட்டு வந்து தன்னைத் தாக்கியது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளையும் அவர் காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார்.

மேலும் தனது குடும்பத்தினரைக் கொன்று விடப் போவதாக சித்தார்த் சபர்வால் மிரட்டியதாகவும் அர்சு கோவித்ரிகர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.