நான் இரவு யாருடன் தங்குகிறேன்? அடுத்தடுத்து போட்டுத் தாக்கும் அமலா பால்!

புதுச்சேரியில் காதலருடன் நடமாடிய அமலா பால் பற்றிய புதிய செய்தி வெளியாகியுள்ளது.


இயக்குனர் விஜயை காதல் திருமணம் செய்த அமலா பால், சமீபத்தில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இந்நிலையில், ஆடை என்ற பெயரில் அமலா பால் நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டர் வெளியாகி பல தரப்பிலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், அமலா பால் ஆடையின்றி நிர்வாணமாக போஸ் கொடுத்ததே இதற்கு காரணம். 

இதையொட்டி, ஊடகங்களில் மேலும் பரபரப்பை அதிகப்படுத்தும் வகையில்  தான் ஒருவரை காதலிப்பதாக, அமலா பால் தகவல் வெளியிட்டு வருகிறார். அவர் யாரை காதலிக்கிறார் என்ற குழப்பத்தில் ரசிகர்களும், ஊடகங்களும் ஆழ்ந்திருக்கும் நிலையில் அமலா பால் சத்தமின்றி தனது காதலருடன் புதுச்சேரியில் ஒரு வீட்டை பிடித்து, குடியேறியுள்ளதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

ஆம். இதுபற்றி வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அமலா பால், ''அரவிந்தர் ஆசிரமம் போவதற்காக அடிக்கடி புதுச்சேரி வருவது வழக்கம். இங்குள்ள அமைதி எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எனவே, இங்கேயே குடியேற முடிவு செய்து, இடம் பிடித்து குடியேறிவிட்டேன். படப்பிடிப்பிற்காக மட்டும் சென்னை சென்று வருகிறேன். இடையில் எனது சொந்த ஊரான கேரளா பக்கம் சென்று வருவேன்,'' என்று குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது, யாரையோ நீங்கள் காதலிப்பதாகச் சொல்கிறார்கள், புதுச்சேரி வீட்டில் தனியாக வசிக்கிறீர்களா,  அல்லது கூட யாரேனும் உள்ளாரா? என்று நிருபர் கேட்க, அதற்கு அமலா பால் கடும் கோபம் காட்டியுள்ளார். 

''நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன, அதை நான் ஏன் என் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விசயம். அதுபற்றி நீங்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை,'' என்று அமலா பால் தெரிவித்துள்ளார்.