தளபதி விஜய்க்கு பிடித்த தல அஜித் படம்! முதல் முறையாக வெளியான தகவல்!

நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்த அஜித் படம் என்ன என்பது குறித்த தகவல் முதல் முறையாக வெளியாகியுள்ளது.


தற்போதைய தமிழ் திரையுலகில் ரஜினிக்கு பிறகு மிகப்பெரிய நடிகர்களாக கருதப்படுபவர்கள் அஜித் மற்றும் விஜய். இருவரது படங்களும் மாறி மாறி மற்றொருவரின் படத்தின் வசூல் சாதனையை முறியடிப்பது வழக்கம். இதனால் விஜய் – அஜித் ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களிலும் சில சமயங்களில் திரையரங்குகளிலும் மோதல் ஏற்படும்.

   ரசிகர்கள் மோதிக் கொண்டாலும் கூட விஜயும் – அஜித்தும் நல்ல நண்பர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது போல் திரைப்படங்களில் வசனம் வைத்தால் வெளி உலகில் இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்த்துவதும் பாராட்டுவதும் சகஜம். என்ன தான் திரைத்துறையில் ஒருவருக்கு ஒருவர் அஜித்தும் – விஜயும் போட்டியாளர்களாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் நண்பர்கள்.

   அஜித் படம் வெளியானால் விஜய் சென்று பார்ப்பதும், விஜய் படம் வெளியானால் அஜித் பார்ப்பதும் இயல்பான ஒன்று. ஆனால் இதுவரை விஜயும் சரி அஜித்தும் சரி தங்களுக்கு பிடித்த படங்கள் குறித்து மனம் திறந்தது இல்லை. அதிலும் அஜித் நடித்த படங்களில் விஜய்க்கு என்ன பிடிக்கம்? விஜய் நடித்த படங்களில் அஜித்துக்கு என்ன பிடிக்கும் என்பது இதுநாள் வரை தெரியாமல் இருந்து வந்தது.   இந்த நிலையில் நடிகர் விஜயின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் விஜய்க்கு பிடித்த அஜித் படம் வேதாளம் என்று குறிப்பிட்டுள்ளார். வேதாளம் படத்தை பார்த்துவிட்டு அஜித்தை விஜய் வெகுவாக பாராட்டியதாகவும் சஞ்சீவ் கூறியுள்ளார். மேலும் ஆலுமா டோலுமா பாடல் விஜய்க்கு மிகவும் பிடித்த பாடம் என்றும் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.