அனாதை பிணமாக கிடந்த கிருஷ்ணமூர்த்தி! தூக்கி எடுத்து அடக்கம் செய்ய உதவிய வைகைப்புயல்! நெகிழ வைக்கும் சம்பவம்!

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி பல்வேறு கால கட்டங்களில் கஷ்டப்பட்டபோது அவருக்கு நடிகர் வடிவேலு உதவி செய்த தருணங்கள் இப்போது தெரியவந்துள்ளது.


திருவண்ணமாலை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி 10ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய நிலையில் சினிமா வாய்ப்பு கேட்டு தன்னுடைய 17வயது வயதில் சென்னை கோலிவுட்டிற்கு வந்தார். பல இடங்களில் வாய்ப்பு இல்லாமல் இருந்த அவருக்கு தற்காலிகமாக புரடக்ஷன் மேனேஜர் வேலை கிடைத்துள்ளது.

பல சினிமா நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்களில் புரொடக்ஷன் மேனேஜராக பணிபுரிந்து வந்த கிருஷ்ணமூர்த்திக்கு நடிகர் வடிவேலுவுடன் நட்பு கிடைத்தது. இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆன நிலையில் பல படங்களில் வடிவேலுவுடன் நடித்துள்ளார் கிருஷ்ணமூர்த்தி. 

தவசி, சாணக்யா, எல்லாம் அவன் செயல், ஐயா படங்களில் வடிவேலுவும், கிருஷ்ணமூர்த்தியும் சேர்ந்து நடித்த காட்சிகள் என்றென்றும் ரசிகர்கள் மனதை விட்டு விலகாது. 2008ம் ஆம் ஆண்டு கிருஷ்ணமூர்த்திக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டபோது அதற்கான மருத்தவமனை செலவை முழுவதுமாக ஏற்றுள்ளார் நடிகர் வடிவேலு. 

அதேபோல் மற்றொரு தருணத்திலும் மருத்துவமனை சிகிச்சைக்கு பணம் தராமல் உறவினர்கள் கைவிட்ட நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கு உதவி செய்துள்ளார் நடிகர் வடிவேலு. இதற்காக நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என கிருஷ்ணமூர்த்தி கேட்டபோது, என்னுடைய சகோதரனாக இருந்தால் செய்யமாட்டேனா என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் வைகைப் புயல் வடிவேலு. 

கிருஷ்ணமூர்த்தி கஷ்டப்படும்போதெல்லாம் பல நேரங்களில் தானே நேரடியாக சென்று பணம் கொடுத்து வடிவேலு உதவியுள்ளார்.

சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் என்று மக்கள் நினைக்கும் நிலையில், இதுபோன்று வறுமையில் வாடுபவர்களும் இருக்கிறார்கள் என்று கிருஷ்ணமூர்த்தியை பார்க்குபோது தான் தெரிகிறது. கோமாளியின் சோகம் மனிதர்களுக்கு தெரியாது என்பார்கள். கிருஷ்ணமூர்த்தியின் சோகம் மனிதர்களுக்கு தெரியும்போது அவருக்கு உதவி செய்ய உயிரோடு இல்லை.