பிக்பாஸ் மூலம் பிரபலமானவரும், தாடி பாலாஜியின் மனைவியுமான நித்யா பாலாஜி நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் போட்டியிடுகிறார்.
கணவன் தாடி பாலாஜிக்கு பயந்து டெல்லிக்கு ஓடிய நித்யா! அதிர்ச்சி தகவல்!
நித்யா அண்மையில் புதிதாகத் தொடங்கப்பட்ட ’தேசிய பெண்கள் கட்சி’யில் இணைந்தார். அந்தக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் மக்களவைத் தேர்தலில் டெல்லியின் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார், தமிழகத்தை விட்டுவிட்டு டெல்லியில் போட்டியிடுவது குறித்து அவரிடம் கேட்டபோது முதலில் காஞ்சிபுரம் தொகுதியில்தான் போட்டியிட இருந்ததாகத் தெரிவித்தார்.
தமிழத்தில் தான் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அங்கு சென்று தன்னைப் பற்றி அவதூறு பரப்பா பாலாஜி திட்டமிட்டிருந்ததாக நித்யா தெரிவித்தார். மது அருந்திவிட்டு தேசிய பெண்கள் கட்சி நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘அவளெல்லாம் கட்சித் தலைவியா’ எனக் கேட்டு தகராறு செய்ததாகவும் நித்யா குற்றம்சாட்டுகிறார்.
பாலாஜி கூறிய எதையும் பொருட்படுத்தாமல் தங்கள் கட்சி நிர்வாகிகள் தன்னை டெல்லியில் போட்டியிட அறிவுறுத்தியதாகவும், வடக்கு டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால் தனக்கு சாதகமாக இருக்கக் கூடும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் நித்யா தெரிவித்தார். அடுத்த சில நாள்கள்ல டெல்லி சென்று தேர்தல் பணிகளை தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.