உன்னை போல் ஒருவனை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை! விஜய்சேதுபதியை கூச்சப்பட வைத்த ஷாருக்!

சென்னை: விஜய் சேதுபதியை மிகவும் பாராட்டி, நடிகர் ஷாரூக் கான் பேசியுள்ளார்.


விஜய் சேதுபதி சமீபத்தில் சிந்துபாத் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது சங்க தமிழன்,  கடைசி விவசாயி உள்ளிட்ட பங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி சை ரா என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க விஜய் சேதுபதி ஆஸ்திரேலியா சென்றார்.

அங்கு அவர் நடித்திருந்த சூப்பர் டீலக்ஸ் படம் விருதுக்காக திரையிடப்பட்டது. இதன் முடிவாக, அப்படத்திற்கு விழாக்குழுவினர் சிறப்பு விருது அளித்துள்ளனர். 

அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியை நடிகர் ஷாரூக் கான் பாராட்டி பேசியிருக்கிறார்.

தனது வாழ்நாளில் பார்த்த நடிகர்களில் மிகவும் ஆச்சரியப்படுத்திய நபர் விஜய் சேதுபதி என்றும், அவருக்கு ஆச்சரிய பரிசு ஒன்றை அளிக்க விரும்புவதாகவும் ஷாரூக் கான் தெரிவித்துள்ளார்.

தமிழ் நடிகருக்கு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அளித்த பாராட்டு, தமிழ் சினிமா வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.