பெற்ற தந்தையை மாமா என்று கூப்பிட வைத்த பிரபல நடிகரின் மனைவி! வேதனையில் ஹீரோ!

நடிகர் சஞ்சய்தத் பாலிவுட்டில் மிக முக்கியமான நடிகர் ஆவார் இவர் தற்போது 59 வயதாகிறது. 59 வயது ஆனாலும் தற்போது வரை மூன்று திருமணங்கள் செய்துள்ளார் சஞ்சய் தத்


 இவர் அமைத்துக் கொண்ட அனைத்து திருமனமும் சர்ச்சையில் சென்று முடிந்திருக்கிறது. தற்போது 2008 முதல் மயான்ட் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இவருடைய இரண்டாவது மனைவி பிரியா பிள்ளை. இவரும் பெரும் சர்ச்சைக்கு பெயர் போனவர். ஏற்கனவே 1984 முதல் 94 வரை அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்தார் ரியா.

பின்னர் தனது இரண்டாவது காதலனாகவும் கணவனாகவும் சஞ்சய் தத்துடன் 2005 முதல் வாழ்ந்து வந்தார். பின்னர் மூன்று வருடத்தில் சஞ்சய் தத்தை பிரிந்து டென்னிஸ் வீரர் லியாண்டர் பயசுடன் தற்போது வரை லிவிங் டுகெதர் முறையில் இருந்து வருகிறார்.ஆனால் சஞ்சய் தத்திற்கு ரியா இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது .

 சஞ்சய் தத்தின் முதல் மனைவி ரிச்சா சர்மா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர். இருவருக்கும் 1987ம் ஆண்டு திருமணமானது. திருமணமான சில ஆண்டுகளிலேயே ரிச்சா சர்மா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டா.ர் கேன்சர் நோய் வந்தவுடன் சஞ்சய்தத் அவரை பிரிந்து சென்றுவிட்டார் .

ஆனால் தற்போது அந்த பிரிவு குறித்து சஞ்சய் விளக்கம் அளித்துள்ளார்.  கேன்சர் நோயினால் நான் ரிச்சாவை பிரிந்து செல்லவில்லை அதுதான் எங்களை இணைத்து வைத்திருந்தது. ஆனால் ரிச்சாவின் குடும்பம் என் மீது பல பழிகளையும் வீண் சச்சரவுகளை ஏற்படுத்தியது.

அவளது பெற்றோர் என்னை மிகவும் துன்புறுத்தினர். தேவையில்லாதவற்றை என்மீது பழி சுமத்தினர். குறிப்பாக அவளது தங்கை மனதளவில் என்னை மிகவும் காயப்படுத்தி விட்டாள். அதன் பின்னர்தான் இவருடன் வாழ முடியாது என நான் அவரை பிரிந்து சென்றேன் என்று கூறியுள்ளார் சஞ்சய் தத். ஒரு கட்டத்தில் நான் பெற்ற மகளை என்னை மாமா என்று அழைக்க வைத்தனர்.

இதற்கு எனது மனைவியும் உடந்தை. இவ்வாறு சஞ்சய் தத் கூறினார்.