நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்க்கு முன்னதாகவே அவர் என்ன பேசினாலும் சர்ச்சையாகி விடுகிறது.
பிரபல சாமியாரை தேடிச் சென்று சந்தித்த ரஜினியின் இளைய மகள்..! அங்கு நடந்தது என்ன? வைரலாகும் புகைப்படம்!

அவர் காவி சாயம் பூசபடுகிறாரா ? அல்லது தானாகவே பூசுக்கொள்கிறாரா என்ற கேள்வி தான் இங்கு பலருக்குள்ளம். ஒரு பக்கம் பேட்டை, தர்பார் என சினிமாக்களில் கொடிகட்டி பறக்கும் நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது அரசியலில் கூட தர்பார் செய்வதுண்டு.
அந்த வகையில் ராமர் சீதை சிலை குறித்து ரஜினி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, அவர் மீது திராவிடர் கழகம் சார்பில் வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் ஆனது. இந்த நிலையில் தான் நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது மகள் சவுந்தர்யா மயிலாடுதுறை தருமபுர ஆதினத்தில் தேசிக ஞான சம்பந்த தேசிகர் என்பவரை சந்தித்துள்ளார்.
மேலும் அவரிடம் ஆசிபெற்ற புகைப்படம் இணையத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.