பிரபல நடிகர் மர்ம மரணம்! அழுகிய நிலையில் உடல் மீட்பு!

பிரபல நடிகர் ஒருவர், உடல் அழுகிய நிலையில், தனது வீட்டிலேயே இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


57 வயதான மகேஷ் ஆனந்த், கூலி நம்பர் 1, ஸ்வார்க், குருஷேத்திரா உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் கடைசியாக, கோவிந்தா உடன் சேர்ந்து ரங்கீலா ராஜ் என்ற படத்தில் நடித்திருந்தார்.

 

இந்நிலையில், மும்பை அந்தேரியின் மேற்கே உள்ள யாரி சாலையில் உள்ள அவரது வீட்டில், உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்அழுகிய நாற்றம் வந்ததால், அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

இதன்பேரில் விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், இது தற்கொலை இல்லை என்றும், தற்கொலைக்கான தடயங்கள் எதுவும் அங்கே காணப்படவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர்.

 

ஆனந்திற்கு, குடிப்பழக்கம் உண்டு. அவரது மனைவி மாஸ்கோவில் வசிக்கும் நிலையில், ஆனந்த் தனிமையில் இருந்து வந்துள்ளார். இதனால், குடிப்பழக்கம் முற்றி, அவர் உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

 

ரஜினியின் வீரா படத்தில் ஐ ஏம் ஏ பேட் மேன் என்று கூறியபடி ஒரு நடிகர் அறிமுகம் ஆகியிருப்பார். அவர் தான் தற்போது உயிரிழந்துள்ள மகேஷ் ஆனந்த். இவர் விஜயகாந்துடனும் பெரியமருது படத்தில் நடித்துள்ளார்.