நடிகர் மாதவனின் மகன் தேசிய நீச்சல் போட்டியில் நான்கு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
தந்தை மாதவனை நெகிழச் செய்த மகன் வேதாந்த்! தேசிய அளவில் பதக்கங்களை குவித்து சாதனை!

தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் என வர்ணிக்கப்படுபவர் மாதவன். கடைசியாக அவர் தமிழில் விக்ரம் வேதா என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது ராக்கெட்ரி த நம்பி எஃபெக்ட் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க சைலன்ஸ் என்ற பன்மொழி திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார். சியாட்டில் நகரில் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு சென்றுள்ள மாதவன் இன்ஸ்டாகிராம் வாயிலாக மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அது என்னவென்றால் அவருடைய மகன் வேதாந்த், தேசிய நீச்சல் போட்டியில் 4 பதக்கங்களை என்பவையாகும்.
கடவுளின் கிருபையாலும் அனைவரின் ஆசிர்வாதத்தாலும் தனது மகன் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றிருப்பதாக மாதவன் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ஜூனியர் அளவிலான போட்டியில் தேசிய அளவில் இது தனது மகன் வெல்ல முதலாவது பதக்கம் என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார் மாதவன்.
அடுத்ததாக ஆசிய போட்டியில் தங்கம் வெல்வதே தனது மகனின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது மகனின் வெற்றிக்கு பாடுபட்ட பயிற்சியாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக மாதவன் கூறியுள்ளார்.