அஞ்சலி அந்த நடிகருடன் ஒரே ரூமில் தான் இரவு தங்குவார்..! சூட்டிங் ஸ்பாட் அந்தரங்கம் இது அந்தரங்கம்..!

நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் படப்பிடிப்பின்போது தங்கும் ஓட்டலில் இருவரும் ஒரே அறையில்தான் தங்குவார்கள் என தயாரிப்பாளர் போஸ்டர் நந்தகுமார் என்பவர் தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.


2002ஆம் ஆண்டு வெளியான பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் ஜெய். பின்னர் சென்னை 28 சுப்பிரமணியபுரம், வாமணன், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கேப்மாரி படத்திலும் நடித்து வருகிறார்.  

நடிகர் ஜெய்க்கும் நடிகை அஞ்சலிக்கும் காதல் இருப்பதாக அடிக்கடி கிசுகிசு பேசப்பட்டு வந்தது. அதோடு குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக ஜெய்யும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இந்நிலையில் நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலியை வைத்து பலூன் என்ற படத்தை தயாரித்த போஸ்டர் நந்தகுமார் படப்பின் போது ஜெய் பல தொல்லைகள் தருவதாக தெரிவித்துள்ளார்.  

படப்பிடிப்பின் போது, அஞ்சலியை படத்தின் இயக்குநரான சினிஷ் ஸ்ரீதரன் பெயர் சொல்லி அழைத்துவிட்டாராம். இதனால் ஜெய் கோபம் அடைந்து எப்படி பெயர் சொல்லி அழைக்கலாம் என பிரச்சனை செய்தாராம். மறுநாள் படப்பிடிப்பில் பங்கேற்காமல் அஞ்சலியை அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்று விட்டாராம் ஜெய்.

இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறுகிறார் போஸ்டர் நந்தகுமார். மேலும் 5 நட்சத்திர விடுதியில்தான் தங்குவேன் என ஜெய் அடம்பிடிப்பார் என்றும், தனக்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறையில் தங்காமல் அஞ்சலி அறைக்கு சென்று அவரது ரூமில்தான் தங்கியிருப்பார் என்றும் பரபரப்பு தகவலை போஸ்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ளார்.

அஞ்சலியும் ஜெய்யும் தங்களுக்கு இடையேயான காதலை மறுத்து வந்த நிலையில், இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்த தகவலை எடுத்து விட்டுள்ளார் தயாரிப்பாளர் போஸ்டர் நந்தகுமார்.