உழைப்பால் உயர்ந்தவன் நீ! அஜித்திற்கு ஓபிஎஸ் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

பிறந்த நாள் கொண்டாடும் அஜித்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


நடிகர் அஜித்குமார் இன்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் அயராத உழைப்பினாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் அஜித் எறு குறிப்பிட்டுள்ளார் ஓபிஎஸ்.

ரசிகர்களின் பேரன்பை பெற்றவர் அஜித் என்றும் அவருக்கு மனமார வாழ்த்துகளை கூறிக் கொள்வதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் HBD அஜித்குமார் என்ற ஹேஷ் டேக்கையும் டேக் செய்துள்ளார் அஜித்.

வழக்கமாக சினிமா நடிகர்கள் யாருக்கும் ஓபிஎஸ் பிறந்த நாள் வாழ்த்து கூறுவதில்லை. ஆனால் அஜித்தை இப்படி ஓபிஎஸ் புகழ்ந்து தள்ளியிருப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.