விருந்து முடிந்து வீடு திரும்பிய நண்பர்கள்..! அப்படியே கவிழ்ந்த லோடு ஆட்டோ..!4 பேருக்கு சம்பவ இடத்திலேயே கோர மரணம்!

ஆற்காடு அருகே ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட கோர விபத்தில் நண்பர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


ராணிப்பேட்டை மாவட்டம் ஹாஜிபேட்டையை சேர்ந்தவர் நிக்கால் என்பவரின் சகோதரிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்து. இதற்காக நண்பர்களுக்கு விருந்து வைக்க முடிவு செய்த நிக்கால் நண்பர்களை ஆற்காடு அருகே உள்ள பஞ்சபாண்டவர் மலைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த சரக்கு ஆட்டோவில் ஆரிப், சையத், கரிமுல்லா, துபெயில் அகமது, கலீம், முபாரக், இதயத்துல்லா, ஆரிப், சையத், நியாஸ், ஜபருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். சரக்கு ஆட்டோவை ஆரிப் ஓட்டி சென்றார். விருந்து முடிந்து நள்ளிரவில் மீண்டும் அனைவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது மேல்விஷாரம் கத்தியவாடி சாலையில் திடீரேன ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாராக சென்று சாலையோரம் இருந்த காம்பவுண்டு சுவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் ஆட்டோவில் பயணம் செய்த அனைவரும் படுகாயம் அடைந்தனர். மேலும் படுகாயமடைந்தோரில் சையத், கரிமுல்லா, கலீம், துபெயில் அகமது ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்றவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விருந்தில் கலந்து கொண்ட நண்பர்கள் சிலர் மது அருந்தி இருந்ததாகவும், ஆட்டோவை ஓட்டியவரும் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.தகவலறிந்து வந்த போலிசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.