ஓரமாக சென்ற டூவீலர்..! மெதுவாக வந்த பைக்..! ஒரே நொடியில் லாரியில் சிக்கி சிதைந்த மனைவி! நேரில் பார்த்து கதறிய கணவன்!

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அருகே அதிவேகமாக வந்த லாரி மோதியதில் கணவருடன் இருசக்கர வாகன்த்தில் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.


திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியில் சேட்டு, சகுந்தலா தம்பதி வசித்து வந்தனர். சகுந்தலாவுக்கு வயது 54 ஆகிறது. இவர்கள் இருவரும் நேற்று மாலை அம்பத்தூருக்கு தங்களது இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற வாகனம் அயப்பாக்கம் அருகே வரும்போது சேட்டு திடீரெ வாகனத்தில் பிரேக் போட்டுள்ளார்.

இதை சற்றும் அறியாத லாரி ஓட்டுநர் ஏற்கனவே அதிகவேகமாக லாரியை ஓட்டி வந்த நிலையில் அவர்கள் மீது வேகமாக மோதினார். இதில் சேட்டு, சகுந்தலா இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். பின்னர் சகுந்தலா மீது லாரியின் பின்சக்கர ஏறியது. இந்த கோர விபத்தில் சகுந்தலா கணவர் கண்முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சகுந்தலாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதி செய்த போலீசார் லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஆகும் சென்னை மற்றும் புறநகரில் சாலை விதி மீறல்கள் விபத்துக்களும், மரணங்களும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.