இளம் மருமகனுடன் கள்ளக்காதல்! மனைவியை கண்டித்த கணவனுக்கு நேர்ந்த துயரம்!

ஹைதராபாத்தில் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதிய பெண் தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை பாறாங்கல்லால் தாக்கிக் கொன்று ரயில் தண்டவாளத்தில் வீசியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஹைதாராபாத்தில் உள்ள போராபந்தா ரயில் நிலையத்தில் டிராக்மேனாக பணியாற்றி வந்த ஸ்ரீனிவாஸ் என்பவர் மனைவி மற்றும் 3 மகன்களுடன் ரயில்வே குடியிருப்பில் வசித்து வந்தார்

 

ஸ்ரீனிவாசுக்கு மறுமகன் முறையுள்ள விஜய் நாயக் என்ற நபர் கடந்த ஆண்டு ஸ்ரீனிவாஸ் வீட்டில் வந்து சில மாதங்கள் தங்கியுள்ளார். மருமகன் விஜய் நாயக்குக்கும் ஸ்ரீனிவாசின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

வயதில் இளையவரான விஜய் நாயக் – ஸ்ரீனிவாசின் மனைவியுடன் நெருங்கிப் பழகியுள்ளார். காமம் கண்ணை மறைக்க மருமகன் என்கிற உறவையும் மீறி விஜய் நாயக்குடன் உல்லாசம் அனுபவிக்க ஆரம்பித்துள்ளார் ஸ்ரீனிவாசின் மனைவி.

 

இது ஸ்ரீனிவாசுக்கு தெரிய வந்தபோது விஜயை வீட்டை விட்டு வெளியேற்றினார். இதையடுத்து விஜய் மல்கான்கிரியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கினார்

 

எனினும் விஜய்க்கும் ஸ்ரீனிவாசின் மனைவிக்கும் இடையேயான உறவு ரகசியமாகத் தொடர்ந்து வந்தது. அதுவும் ஸ்ரீனிவாசுக்கு தெரியவந்ததைடுத்து மனைவியுடன் தகறாறு செய்த ஸ்ரீனிவாஸ் மனைவியை தாக்கத் தொடங்கினார்.

 

இதையடுத்து தனது கணவனை கொன்றுவிடுமாறு விஜயிடம் கூறிய அந்தப் பெண் கடந்த 1-ஆம் தேதி ஸ்ரீனிவாஸ் உறங்கிக்கொண்டிருந்த போது விஜயை அழைத்தார்

 

அங்கு வந்த விஜய் ஸ்ரீனிவாசை விஜய் பாறாங்கல்லால் தலையில் தாக்கிக் கொன்றார். பின்னர் ரயிலில் அடிபட்டு தலை சிதைந்து இறந்ததை போன்று காட்ட இருவருமாகச்  சேர்ந்து ஸ்ரீனிவாசின் உடலை அருகில் உள்ள ரயில் தண்டவாளப் பகுதிக்கு இழுத்துச் சென்று வீசிவிட்டு எதுவுமே தெரியாதது போல் வந்து விட்டனர்.

 

இந்நிலையில் ஸ்ரீனிவாசின் உடலை இழுத்துச் சென்ற போது கால்களில் ஏற்பட்ட காய வித்தியாசத்தைக் கண்ட போலீசார் சந்தேகம் ஏற்பட்டு புலனாய்வு மேற்கொண்ட போது ஸ்ரீனிவாஸ் வீட்டில் இருந்து ரயில் தண்டவாளத்துக்கு உடலை இழுத்து வந்த தடயங்கள், ரத்தச் சிதறல்கள், சிக்கின.

 

மோப்ப நாயும் ஸ்ரீனிவாஸ் வீட்டுக்குள் சென்று நின்றது 

இதனைத் தொடர்ந்து ஸ்ரீனிவாசின் மனைவியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விவரங்கள் அனைத்தும் அம்பலமாகின. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.