அதிவேகம்! தனியார் பேருந்தை ஒரு ஊரே ஒன்று கூடி தீ வைத்து கொளுத்தி தீர்த்த ஆத்திரம்!

சேலம் அருகே விபத்தை ஏற்படுத்தி இளைஞனின் சாவுக்கு காரணமான பேருந்தை ஊர்மக்கள் ஆத்திரத்துடன் கொளுத்திய உணர்ச்சிக் கொந்தளிப்பான பதற்றமிகு காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


தனியார் பேருந்துகள் என்றாலே முரட்டுத் தனமான வேகத்துக்கும், பந்தயத்துக்கும் பெயர் பெற்றவை என ஒரு புகார் இருப்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் சேலத்தில் இருந்து போளூர் மார்க்கத்தில் கருமாந்துறை நோக்கி ஒரு தனியார் பேருந்து அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தது.

 

கருமாந்துறை அருகே சென்ற போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் பேருந்து சாலையில் சென்ற இளைஞர் மீது மோதியதாகக் கூறப்பட்டுகிறது இதில் அவர் உயிரிழந்தார்இதனைத் தொடர்ந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மாயமாகினர்.

 

இந் நிலையில் மக்களின் ஒட்டுமொத்த ஆத்திரமும் பேருந்தின் மீது திரும்பியது. பேருந்தை சுற்றி வளைத்து திரண்டெழுந்த மக்கள் கண்ணாடிகள் உள்ளிட்ட பாகங்களை அடித்து உடைத்தும், டயர்களை பிய்த்து எறிந்தும் சூறையாடினர்.

 

அப்படியும் ஆத்திரம் தீராத நிலையில் அனைவரும் ஒன்று கூடி பேருந்தை தீ வைத்துக் கொளுத்தினர்விபத்து விவகாரத்தில் தவறு யார் மீது? ஓட்டுநர் மற்றும் நடத்துநர் யார்? விபத்துக்கு முன் என்ன நேர்ந்தது என்பவை குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.

 

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் மக்களால் கொளுத்தப்பட்டதால் எரியும் நெருப்புக்கிடையே அடையாளங்களை இழந்த பேருந்தின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.