நாயைத் தூக்கி வெளியே போடுங்க… தி.மு.க. தொண்டனுக்கு ஆ.ராசா கொடுக்கும் மரியாதை இம்புட்டுத்தாங்க.

தேர்தல் நேரத்தில் தொண்டர்களை சந்திக்கும்போது, நீங்கள்தான் எங்கள் கடவுள் என்ற ரேஞ்சுக்கு உருகுவது அரசியல் தலைவர்களின் வழக்கம். ஆனால், தேர்தல் முடிந்தவுடன், தொண்டனை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்.


அட, தொண்டனை பார்க்கவில்லை என்பதுகூட தவறு இல்லை. தலைவரை பாராட்டிய ஒரு தி.மு.க. தொண்டனுக்கு கிடைத்த அவமரியாதை, தி.மு.க.வினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தி.மு.க.வின் தலைமையில் மத்திய அரசின் விவசாய சட்ட மசோதாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை அருகே தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இந்தப் போராட்டத்தில் தி.மு.க.வின் எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டு ஆவேசமாக பேசிக்கொண்டு இருந்தார். அவரது பேச்சினால் கவரப்பட்ட தொண்டர் ஒருவர் உற்சாகத்துடன், ‘ஆ.ராசா வாழ்க,’ என முழக்கமிட்டார். 

அவ்வளவுதான். தன்னுடைய பேச்சை தடுத்து நிறுத்துவதாக நினைத்து பொறுமையை இழந்துவிட்டார் ராசா. உடனே அவர் டென்ஷனுடன், ‘யார்ரா அவ…. அந்த நாய தூக்கி வெளிய வீசுங்க’ என ஆவேசமாக திட்டினார். இது மேடையில் இருந்தவர்களை மட்டுமின்றி அத்தனை தொண்டர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அடப்பாவமே, தி.மு.க.வில் தொண்டனாக இருப்பது எத்தனை அவமானம் என்பதை இனியாவது புரிந்துகொண்டால் சரி.