கர்ப்பமாக்கிவிட்டு கம்பி நீட்டிய காவல் அதிகாரி! நிறைமாத கர்ப்பிணி செய்த அதிர வைக்கும் செயல்!

காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு கம்பி நீட்டிய போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு கர்ப்பிணி பெண் சரியான பாடம் புகட்டியுள்ளார்.


தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளராக இருப்பவர் சீனிவாசன். 2010ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. மனைவியுடன் பாலக்கோடு காவலர் குடியிருப்பில் சீனிவாசன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சீனிவாசன் வீட்டுக்கு கிருஷ்ணகிரியை சேர்ந்த பெண் ஒருவர் தனது வயிற்றை தள்ளிக் கொண்டு வந்தார். அவரை பார்த்த சீனிவாசன் உடனடியாக வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.

ஆனால் அந்த பெண்மணி சீனிவாசன் வீட்டு முன்பு அமர்ந்து திடிரென தர்ணா போராட்டத்தை தொடங்கினார். கடந்த 2008ம் ஆண்டு முதல் தனக்கு சீனிவாசன் பழக்கம் என்று அந்த பெண்மணி கூறினார். தனது பெயர் சத்யா என்றும் தனது கர்ப்பத்திற்கு காரணம் சீனிவாசன் தான் என்றும் அந்த பெண் தெரிவித்தார்.

காதலித்து குடும்பம் நடத்திவிட்டு தற்போது கர்ப்பமான பிறகு தன்னை கண்டுகொள்ளாமல் சீனிவாசன் ஏமாற்றுவதாக கூறி சத்யா போராட்டத்தை தொடர்ந்தார். தன்னை சீனிவாசன் ஏற்கும் வரை அந்த வீட்டை விட்டு வெளியேறப்போவதில்லை என்று திட்டவட்டமாக சத்யா கூறினார்.

ஆசை தீர காதலித்துவிட்டு தற்போது திடீரென ஏன் சீனிவாசன் தன்னிடம் பேச மறுக்கிறார் என தெரியவில்லை என்றும் சத்யா கூறினார். தான் தான் முதலில் சீனிவாசனுக்கு அறிமுகம் ஆனதாகவும் அதன் பிறகே அவர் கல்யாணம் செய்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடைய அங்கு வந்த போலீசார் சத்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சீனிவாசனை அழைத்து விசாரிப்பதாக அவர்கள் வாக்குறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் சீனிவாசன் வீட்டு முன்பிருந்து அந்த பெண் புறப்பட்டார்.

காவல் அதிகாரி ஒருவரே பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு கம்பி நீட்டிய சம்பவம் தருமபுரி போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.