கோவையில் பயங்கரம்! 7 ஆம் வகுப்பு பயிலும் பெற்ற மகளை கர்ப்பமாக்கிய காமக் கொடூரன்!

கோவையில் பெற்ற மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மனித மிருகம் கைது செய்யப்பட்டுள்ளான்.


கோவை பூலுவபட்டி அருகே உள்ள வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவன் 35 வயதன நபர். இவன் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு லோடுமேனாக பணிபுரிந்து வருகிறான்.

இவனது மனைவி தனியார் பள்ளியில் ஆயா வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்  இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இவர்களது மகள்,  தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  சில மாதங்களுக்கு முன்பு , மனைவி வேலைக்கு சென்று விட , மகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார்.

அப் போது அவரது தந்தை பெற்ற மகள் என்றும் பாராமல் கட்டாயப்படுத்தி உடலுறவு  கொண்டுள்ளான். இது தொடர்கதையாகியுள்ளது. தனக்கு நேரும் கொடுமை என்ன என்று கூட அந்த சிறுமியால் புரிந்து கொள்ள முடியவில்லை.

மேலும் தந்தை செய்யும் கொடுமையை தாயிடம் கூட அவருக்கு தெரிவிக்க முடியவில்லை. இந்த நிலையில் திடீரென மகள் வயிற்று வலி என கூற   மனைவிக்கு தெரியாமல்  சிகிச்சைக்காக  மகளை அரசு மருத்துவமனைக்கு  அழைத்து  வந்துள்ளான் அந்த கொடூர தந்தை.

அப்போது மாணவிக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது. இதை தொடர்ந்து மகள் கர்ப்பமானது குறித்து தாய் விசாரித்ததில் அதற்குன் காரணம் தந்தை என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கடும் ஆத்திரம் அடைந்த தாய் தனது கணவன் தனது மகளை பலாத்காரம் செய்துவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மருத்துவர்கள் கொடுத்த பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் , பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து மகளை பலாத்காரம் செய்த அந்த கொடூரனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.