அவன் என்னை விட்டு போய்டக்கூடாது..! அதான்..! மகளுக்கு கள்ளக்காதலனை கணவனாக்கிய விபரீத தாய்! சென்னை பகீர்!

கள்ளக்காதலி மற்றும் அவரது மகளுடன் குடும்பம் நடத்தி வந்த நபர் மனைவி கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.


சென்னை பொழிச்சலூரை சேர்ந்த கண்ணன் கட்டிடத்தொழிலாளி. இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். ஊரப்பாக்கத்தில் கட்டிட வேலைக்கு சென்ற கண்ணன் அங்கு செங்கல்பட்டை சேர்ந்த யுவராணி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் தெரியவர கணவர் மீது மனைவி மஞ்சுளா புகார் அளித்தார்.

கண்ணனை அழைத்து விசாரித்த போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மீண்டும் யுவராணியுடனான கள்ளத்தொடர்பை புதுப்பித்துள்ளார் கண்ணன். இனிமேல் கண்ணன் தன்னை விட்டு பிரியக்கூடாது என நினைத்த யுவராணி அவரது 19 வயது மகளை கண்ணனுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்துள்ளார்.

அப்புறம் என்ன கண்ணணுக்கு ஒரே கொண்டாட்டம் தாய், மகள் இருவரையும் மாறி மாறி வேட்டையாடி வந்துள்ளார். இதனால் 19 வயது சிறுமி கர்ப்பம் ஆனார். இதையடுத்து மீண்டும் கண்ணன் மீது தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மஞ்சுளா புகார் அளித்துள்ளார். தற்போதும் காவல்துறை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்காமல் கண்ணன், யுவராணி அவரது மகள், மஞ்சுளா ஆகியோரை வரவழைத்து விசாரணை மட்டும் நடத்தி கண்ணனை எச்சரித்து மனைவியுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் கண்ணன் மீண்டும் யுவராணி வீட்டிற்கு சென்றுள்ளார். இதுமட்டுமின்றி கண்ணன், யுவராணி ஆகியோர் மஞ்சுளாவுக்கு தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மனமுடைந் மஞ்சுளா தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் மஞ்சுளாவை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கண்ணன் மகன் கொடுத்த புகாரில் சங்கர் நகர் போலீசார் கண்ணன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தது. விசாரணையில் கண்ணன் ஏற்கனவே வந்தவாசியில் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று குடும்பம் நடத்தியதும் தெரியவந்துள்ளது.