திருப்பூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த முதியவருக்கு தரும அடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
அந்த தாத்தா என்ன ரூமுக்குள் கூட்டிட்டு போய் கதவை மூடினார்..! டான்ஸ் கிளாஸ் சென்ற 8 வயது சிறுமிக்கு 50 வயது கிழத்தால் நேர்ந்த பயங்கரம்!
திருப்பூரில் 8 வயது சிறுமி ஒருவர் ஆசிரியை ஒருவரிடம் நடனம் கற்று வருகிறார். இதற்காக அடிக்கடி அவர் அந்த நடன ஆசிரியை வீட்டிற்கு செல்வது வழக்கம். குடியரசுத் தினத்தன்று வழக்கம்போல் 8 வயது சிறுமி நடனம் கற்றுக்கொள்வதற்காக அந்த ஆசிரியை வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அப்போது அவர் வெளியில் சென்றுவிட்டார்.
இதனால் சிறுமி சிறிது நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அந்த நடனப் பள்ளி ஆசிரியையின் தந்தை 50 வயதான முதியவர் சிறுமியை வீட்டிற்குள் அழைத்துள்ளார். தாத்தா வயதில் உள்ளவர்தானே அழைக்கிறார் என சிறுமி உள்ளே செல்ல பேத்தி வயதுள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பயந்து போன சிறுமி அங்கிருந்து வெளியேறி வீட்டிற்கு ஓடிவந்து தனக்கு நடந்ததை சொல்லி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், உறவினர், பொதுமக்கள் அந்த நடனப் பள்ளி ஆசிரியையின் தந்தை சரவணனை பிடித்து தரும அடி கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சரவணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது அந்த ஆசிரியை வீட்டிற்கு யாரும் குழந்தைகளை அனுப்புவதில்லை என தெரிகிறது. தந்தை செய்த தவறால் மகள் தற்போது வருமானத்தை இழந்து தவிக்கிறார்.