கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் அருகே படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த செவிலியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகி வருகிறது.
காதல் பாட்டு! காம விளையாட்டு! கர்ப்பினியான காதலி! காதலன் செய்த கொடூர செயல்!

படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் 23 வயதே ஆன ஸ்ரீஜா. இவர் நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக ஸ்ரீஜா மாயமாகியுள்ளார். இதனை தொடர்ந்து ஸ்ரீஜாவின் பெற்றோர் போலீசாரை நாடியுள்ளனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசாருக்கு நாகர்கோவில் அருகே தாமிரபரணி ஆற்றில் இளம் பெண் ஒருவரது சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில் அது ஸ்ரீஜா உடல் என்பது தெரியவந்தது.
ஐ.எம்.இ. எண்ணை கொண்டு போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் மாங்காடு பகுதியை சேர்ந்தவிபின் என்பவனிடம் அந்த செல்போன் இருந்தது. அவனை அழைத்து வந்து விசாரித்த போது கொலைக்கான காரணம் தெரியவந்தது. படந்தாலுமூடுவில் இருந்து தினமும் பணிக்கு செல்லும் ஸ்ரீஜா விபின் ஓட்டி வரும் வேனில் செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
ஆனால் திருமணம் செய்து கொள்ள மனம் இல்லாத
விபின் ஸ்ரீஜாவை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலத்தில் இருந்து ஆற்றில் தள்ளி
கொடூரமாக கொலை செய்துள்ளார். தனது காதலி 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்கிற
இரக்க குணம் கூட இல்லாமல் கொடூரமாக கொலை செய்தவிபின் தற்போது கம்பி எண்ணிக் கொண்டு
இருக்கிறான்.