துப்பாக்கிச் சூடு! குண்டு காயத்தை தாங்கிக் கொண்டு மகளை தேர்வுக்கு அழைத்துச் சென்ற தந்தை!

மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட நிலையிலும் தனது மகளை தேர்வறைக்கு தந்தை அழைத்து சென்ற சம்பவம் பிஹாரில் நிகழ்ந்துள்ளது.


தற்போது பீகார் மாநிலம் பேகுசராய் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர் தனது மகளை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கான தேர்வறைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை வழிமறித்து உள்ளது. அவரது கைகளை கயிற்றால் கட்ட முற்படுகையில் அவரது மகள் தடுத்துள்ளார். இதையடுத்து ராம்கிரி பாலை துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுவிட்டு அந்த கும்பல் இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளது.

 

நெஞ்சில் தோட்டாக்கள் பாய்ந்த போதும் தனது மகளை தேர்வுக்கு சரியான நேரத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவர் நினைத்துள்ளார். தனது உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தேர்வறைக்கு மகளை அழைத்துச்சென்ற ராம்கிரி பால் அங்கு மகளை இறக்கிவிட்டுவிட்டு தனியார் மருத்துவமனையில் சென்று சேர்ந்து கொண்டார்.

 

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தான் எவ்வளவு முறை சொன்ன போதும் தனது தந்தை தன்னை தேர்வறையில் விட்டுவிட்டு தான் செல்வேன் என்று கூறியதாக அவரது மகள் கண்ணீர் வடித்தார்.

 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராம்கிரி பாலுக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை. அவருக்கு நினைவு திரும்பியவுடன் இது தொடர்பாக விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

 

இருப்பினும் இச்சம்பவத்தில் தொடர்புடைய சிலரை அடையாளம் கண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ள ராமகிரி பால் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர்.

 

எனவே அப்போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் மீது கொலைவெறி தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.