லாட்ஜில் ரூம் போட்டு இளைஞன் அரங்கேற்றிய பகீர் செயல்! சிசிடிவி காட்சிகளை பார்த்து அதிர்ந்த ஊழியர்கள்! ஏன் தெரியுமா?

லாட்ஜில் அறையெடுத்து தங்கிய இளைஞர் விலைமதிப்புமிக்க எல்.இ.டி டி.வி.யை திருடி சென்ற சம்பவமானது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் 4 முனை சந்திப்பு என்னும் பகுதி அமைந்துள்ளது. இதற்கருகே கே.வி.ஆர் எனப்படும் தங்கும் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் மர்ம நபர் ஒருவர் நேற்று முன்தினம் காலை கையில் காலி பெட்டியுடன் அறை எடுத்து தங்குவதற்கு வந்துள்ளார். ஆதார் கார்ட்டை சமர்ப்பித்துவிட்டு அந்த இளைஞர் அறை எடுத்துள்ளார்

அறைக்குள் சென்ற சில மணிநேரங்களிலேயே அதே பெட்டியை எடுத்துக்கொண்டு அந்த இளைஞர் வெளியே சென்றுள்ளார். நெடுநேரமாகியும் அந்த இளைஞர் விடுதிக்கு திரும்பாததால், விடுதி ஊழியர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். 

தங்களிடமிருந்த மாற்று சாவியை உபயோகித்து விடுதியின் ஊழியர்கள் இளைஞர் தங்கிய அறையை திறந்துள்ளனர். அப்போது அறையில் வைக்கப்பட்டிருந்த 15,000 ரூபாய் மதிக்கத்தக்க எல்.இ.டி டிவி திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்துள்ளனர். 

உடனடியாக சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது, அந்த இளைஞர் டிவியை, தான் எடுத்து வந்த பெட்டிக்குள் வைத்து மீண்டும் வெளியே சென்றது கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த இளைஞர் சமர்ப்பித்த ஆதார் அட்டையும் போலியானது என்பதை அதன் பிறகு கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவமானது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.