தாயுடன் படுத்திருந்த குழந்தை! அலேக்காக தூக்கி தள்ளு வண்டியில் போட்ட கடத்தல்காரன்! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

4 வயது குழந்தையை கடத்த முயன்ற சம்பவமானது பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்துக்கு உட்பட்ட ரிஷி நகரில் குடும்பத்தினருடன் ஒருவர் வீட்டின் வெளியே படுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் வந்த தள்ளுவண்டிக்காரர் ஒருவர் படுத்துக்கொண்டிருந்த 4 வயது குழந்தையை அபகரிக்க முயற்சித்தார். அவர் குழந்தையை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, குழந்தையின் தாய் கண்டுவிட்டார். உடனடியாக அந்த நபரிடம் இருந்து குழந்தையை மீட்டெடுத்தார்.

பின்னர் குழந்தையின் உறவினர்கள் தள்ளுவண்டிக்காரரை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார். உடனடியாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளைஞர் குழந்தையை கடத்த முயற்சித்ததை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை உபயோகித்து காவல்துறையினர் குழந்தை கடத்தலில் ஈடுபட முயன்ற இளைஞரை கைது செய்தனர்.

இந்த சம்பவமானது பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.