கடும் தலைவலி..! இடது கை, கால் செயல் இழப்பு! மூளையின் ரத்தக்குழாயில் அடைப்பு! ஊரடங்கிற்கு சொந்த ஊர் சென்ற இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்!

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடைய தம்பிக்கு உதவுமாறு அண்ணன் ஒருவர் வெளியிட்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் அருண் சங்கர். இவர் சென்னை புறநகரான செங்குன்றத்தில் அமைந்துள்ள தனியார் பரிசோதனை மையத்தில் டெக்னீஷியனாக பணியாற்றி வந்துள்ளார். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டவுடன் தன்னுடைய சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். இவருடைய சகோதரரின் பெயர் ஐயா சங்கர்.

ஊருக்கு சென்ற சில நாட்களிலேயே அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது.  அடுத்த சில நாட்களிலேயே அவருடைய இடது கால் மற்றும் இடது கை செயலிழந்து போயுள்ளன. உடனடியாக ஸ்கேன் செய்து பார்த்ததில் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக அருண் சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவருடைய சகோதரரிடம் கூறியுள்ளனர். மேலும் அதற்கு 15 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவர்கள் வசதியில்லாதவர்கள் என்பதால் அவ்வளவு பணத்தை திரட்ட இயலவில்லை.

இந்நிலையில் வேறு வழியின்றி அருண் சங்கரின் சகோதரர் ஐயா சங்கர் பொதுமக்களிடம் கண்ணீர் மல்க ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "என்னுடைய சகோதரர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், அறுவை சிகிச்சை செய்வதற்கு 15 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. நாங்கள் வசதி இல்லாதவர்கள். நாங்களும் மிகவும் சிரமப்பட்டு பணத்தை புரட்டி கொண்டு வருகிறோம். ஆனால் 15 லட்சம் வரை எங்களால் திரட்ட இயலாது. அதனால் பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு கண்ணீர்மல்க கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். அந்த வீடியோ உடன் தன்னுடைய சகோதரரின் ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் மருத்துவமனை பில்கள் முதலியவற்றையும் இணைத்து அனுப்பியுள்ளார். 

கீழே குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்கில் நன்கொடை செலுத்துமாறு கூறியுள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெயர்: பி.ஐயாசங்கர்

வங்கி: ஐசிஐசிஐ

இடம்: வில்லிவாக்கம்

கணக்கு எண்: 277801501048

IFSC CODE: ICIC0002778

மொபைல் எண்: 9962831502