முன்னாள் காதலனை வீட்டுக்குள் அனுமதித்த இளம் பெண்ணுக்கும் அவரது தாயாருக்கும் ஏற்பட்ட பயங்கரம்! அதிர்ச்சி சம்பவம்!

டெல்லியில் இளைஞர் ஒருவர் தன்னுடைய முன்னாள் காதலியையும் அவரது தாயாரையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியிலுள்ள மண்சாரா என்ற அப்பார்ட்மெண்டில் சுமித்ரா (வயது 45) என்ற பெண் வசித்து வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி 25 வயதில் சம்ரிதா என்ற மகள் உள்ளார். இவர்கள் வசித்து வரும் அதே பகுதியில் வசித்து வருபவர் விக்ராந்த் நாகர்.

விக்ராந்த் மற்றும் சம்ரிதா ஆகியோர் வரும் காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சம்ரிதா, அவரது காதலரிடம் காதலை பிரேக்கப் செய்திருக்கிறார். இதனால் விக்ராந்த் மிகவும் மனமுடைந்து போய் இருக்கிறார்.

விக்ராந்துடன் காதல் பிரேக் அப் செய்த சம்ரிதா வேறு ஒரு ஆண் நண்பருடன் பழகி வந்திருக்கிறார். இதனை பார்த்த முன்னாள் காதலர் விக்ராந்த் மிகவும் ஆத்திரமடைந்து இருக்கிறார். இதனால் செய்வதறியாது விபரீத செயலில் ஈடுபட்டு இருக்கிறார்.

நேற்றைய காலை சம்ரிதா ஹோட்டல் மற்றும் சினிமாவிற்கு தன் நண்பர்களுடன் சேர்ந்து சென்று வீடு திரும்பியிருக்கிறார். சம்ரிதாவின் வருகைக்காக காத்திருந்த விக்ராந்த், மற்றுமோர் உடைய நம்பர் பிரயாக் அவருக்கு தெரியாமல் அமைதியாக பின்தொடர்ந்து இருக்கின்றனர். 

பின்னர் சம்ரிதா வீட்டில் நுழைந்து அவரையும் அவரது தாயார் சுமிதாவையும் கொடூரமாக குத்தி கொலை செய்திருக்கின்றனர். பின்னர் சம்ரிதாவின் வீட்டில் இருந்த நகை பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டும் அவரது கார் சாவியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து இருவரும் தப்பி ஓடி உள்ளனர். 

காரை வேகமாக இயக்கிய விக்ராந்த் நாகரை பார்த்து அங்கிருந்த காவலாளி கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு அவர் பிரேக்கை பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை மிதித்து விட்டேன் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நாகர் அடிக்கடி சம்ரிதாவின் வீட்டிற்கு வந்து செல்லும் நபர் என்பதால் அவர் மீது எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் அங்கிருந்து காவலாளி அனுப்பிவிட்டார்.

சம்பவம் நடந்த மறுநாள் காலை சம்ரிதாவின் வீட்டின் கதவு வெகுநேரமாக பூட்டியே இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது வீட்டில் வேலை செய்யும் பெண் பக்கத்து வீட்டில் இருந்து சாவியை பெற்று வீட்டின் கதவை திறந்து பார்த்திருக்கிறார். அப்படி பார்த்த அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

சம்ரிதாவும் அவரது தாயார் சுமிதா இருவரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . 

இந்த சம்பவம் அந்த குடியிருப்பில் வசித்து வரும் அனைவருக்கும் பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.