திருமணத்திற்கு முன்பே 6 மாத கர்ப்பம்..! தவித்த கர்ப்பிணி கழுத்தில் ஒரு வழியாக விழுந்த தாலி!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி பகுதியில் வசித்து வந்த இளம் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு பின்னர் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்த இளைஞரை போலீசார் அறிவுரை கூறி திருமணம் செய்து வைத்துள்ளனர்.


திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் துறையூர் பச்சை மலை கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் இருக்கும் தண்ணீர் பள்ளம் என்னுமிடத்தில் பிரதாப் என்ற இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். 

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இளைஞர் பிரதாப் அதே பகுதியில் வசித்து வரும் சூர்யா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் சூர்யா பிரதாப் ஆல் கற்பமாக பட்டு 6 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

இளம்பெண் சூர்யா கர்ப்பம் ஆனதை அறிந்த அவரது பெற்றோர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மகளின் கர்ப்பத்திற்கு காரணமான பிரதாப்பை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி உள்ளனர்.

ஆனால் பிரதாப் தன்னுடைய 6 மாத கர்ப்பிணியான சூர்யாவை திருமணம் செய்ய மறுத்துள்ளார் . இதனையடுத்து சூர்யாவின் பெற்றோர் அருகில் இருந்த காவல் நிலையத்தில் பிரதாப்பின் மீது புகார் அளித்துள்ளனர்.

வழக்கை விசாரித்த காவல் அதிகாரிகள் இருவரும் மேஜர் என்பதால் பிரதாப்பை அழைத்து அறிவுரை கூறியுள்ளனர். போலீசின் அறிவுரையை கேட்ட பிரதாப் தன் காதலியான சூர்யாவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் கோவிலில் வைத்து திருமணம் நடத்தப்பட்டது. போலீசாரின் அறிவுரைப்படி சூரியாவை இளைஞர் பிரதாப் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.